அமெரிக்காவில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கியில் முனையில் பலி!
அமெரிக்காவில் சால்ட் லேக் சிட்டியில் துப்பாக்கி சூட்டில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில் வீடு ஒன்றில் இருப்பவர்களின் நலனுக்கான பரிசோதனையில் ஈடுபட பொலிசார் தற்செயலாக சென்றுள்ளனர்.
இதில், அந்த வீட்டில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து உள்ளனர். இதனை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது,
துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி பற்றிய விவரம் எதுவும் தெரிய வரவில்லை. பொதுமக்களுக்கு இதனால், அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை. நகரின் தென்பகுதியில் 8 ஆயிரம் பேர் வசிக்க கூடிய பகுதியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் சமீப காலங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை தடுக்க, ஆயுத கட்டுப்பாடு உள்ளிட்ட கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கான முயற்சியில் பைடன் (Joe Biden) தலைமையிலான அரசு இறங்கி உள்ளது. எனினும், தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.