சீனாவுக்கு உளவு பார்த்த 8 பேருக்கு ஆயுள் தண்டனை!
சீனாவுக்கு உளவு பார்த்த பிலிப்பைன்சின் முன்னாள் மேயர் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்சின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகர முன்னாள் மேயர் ஆலிஸ் குவோ (வயது 35). சீனாவை சேர்ந்த இவர் சட்ட விரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று அங்கு மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உடனடியாக பணி நீக்கம்
மேலும் சீனாவுக்கு சொந்தமான ஒரு சூதாட்ட நிறுவனத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். இதன்மூலம் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் மோசடி செய்யப்பட்டனர்.
எனவே சீனாவுக்கு உளவு பார்த்ததாக கூறி ஆலிஸ் குவோ உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து முன்னாள் மேயர் ஆலிஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.