கனடாவில் 80 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி யார்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் லண்டன் நகரில் விற்கப்பட்ட வெற்றி லொத்தர் சீட்டுக்கான 80 மில்லியன் டொலர் பரிசு, விற்பனை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் இதுவரை யாராலும் கோரப்படவில்லை.
இது கனடா லொத்தர் சீட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகும்.
நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். வெற்றியாளர் ஒருவர் தானா அல்லது குழுவா என்பது கூட தெரியவில்லை, ஏனெனில் இதுவரை எவரும் எங்களை தொடர்புகொள்ளவில்லை,” என ஒன்றாரியோ லொத்தர் சீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெற்றியாளர்கள் பொதுவாக நிதி ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள், வங்கியாளர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்த சில மாதங்கள் எடுத்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பல ஆண்டுகளாக லண்டன் நகரில் பெரிய லொத்தர் வெற்றிகள் பதிவாகியுள்ளன. அண்மைய நாட்களில் 11 மில்லியன் மற்றும் 9 மில்லியன் டொலர் பரிசுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு சென் தோமஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் 26 மில்லியன் டொலர் வென்றபோதும் ஆலோசனை பெற்ற பின்னரே பரிசினை பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.