குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி
குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் 9 பேர் பலியாகி உள்ளனர்.
குஜராத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கம்பீரா பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததையடுத்து பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் விழுந்ததையடுத்து பாலத்தின் மேல் பயணித்துக்கொண்டிருந்த இரு லொறிகள் , இரு வேன்கள் உட்பட 6 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன.
விபத்தில் முதல்கட்டமாக 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பாலமானது 43 ஆண்டுகள் பழமையானதோடு கடந்தாண்டு தான் பழுது பார்க்கப்பட்டது. 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.