பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட 25 வயது இளைஞன்!
பாரிஸில் புறநகர் பகுதியான வால்டுவாஸ் பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
25 வயது இளைஞன் தலையில் கல்லடி பட்டு இறந்த நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் தரையில் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையிலேயே இந்த சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் முகத்தில் அடிவாங்கிய அடையாளங்களையும் தலையின் ஓடு நொருங்கிக் கிடந்ததையும் கண்டுள்ளனர். குறித்த சடலத்திற்கு அருகே இரத்தக்கரை படிந்த இரண்டு கற்கள் துண்டாகக் கிடதுள்ள நிலையில் மிக அருகில் இருச்சக்கர வாகனம் ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.
இச் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஊர்தி காப்புலத்தில் (பார்க்கிங்) கண்ணாடி உடைக்கப்பட்ட வாகனம் ஒன்று இருந்தது. நடுவீதியில் இந்த சடலம் கிடந்ததாகவும் தலையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவரது உடலில் எலும்புகள் அனைத்தும் அடித்து உடைக்கப்பட்டிருப்பதனையும் அவதானிக்க முடிந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தைக் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகிறது. இவ்விசாரணையின் முதல் படி இறந்தவரை அடையாளங் காணுதல் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நபர்கள் தங்கள் மாநகர சபைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவராக இருப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் அங்கு அதிகம் வசிக்கும் போதிலும் ஒரு நபர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ள போதிலும் மக்கள் அதனை அறியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.