லண்டனில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்த தந்தை மகன்; விசாரணைகளில் அம்பலமான தகவல்!
லண்டனில் தங்கள் வீட்டில், தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து 977000 பவுண்ட் மதிப்புள்ள போலி நாணயத்தாள்களை அச்சிட்டு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில் குறித்த இருவர் சாதுர்யமாக மேற்கொண்ட போலி நாணத்தாள் அச்சடித்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி சந்தேக நபர்கள் நீண்ட நாட்களாக நாடு முழுவதும் சுற்றித் திரிந்து போலி நாணயத்தாள்கள் விநியோகித்ததை ஒப்புக்கொண்டனர்.
இவர்கள் தங்களின் சொந்த வீட்டில் அச்சடித்த பணத்தை வைத்து சாமர்த்தியமாக லட்சக்கணக்கில் வீட்டு செலவுகளை செய்து வந்துள்ளனர்.
தந்தை கிறிஸ்டோபர் கவுண்ட் மற்றும் மகன் ஜோர்டான் கவுன்ட் ஆகியோர் யார்க்ஷயரில் உள்ள பேங்க் ஸ்ட்ரீட் என்ற வீட்டில் 977000 பவுண்ட் மதிப்புள்ள போலி நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையின் போது, இருவரும் சேர்ந்து எப்படி போலி நாணயத்தாள்களை அச்சிட்டனர் என்று பொலிஸார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்தனர்.
போலி நாணயத்தாள்கள் குறித்த தகவல் அம்பலமானதை அடுத்து, வெஸ்ட் யார்க்ஷயர் பொலிஸார் மற்றும் தேசிய போலி நாணயத்தாள்கள் அமைப்பு ஆகியவை இந்த போலி நாணய மோசடியை முறியடிக்க பெரிய நடவடிக்கையை மேற்கொண்டன.
இந்த விவகாரத்தில் தேசிய குற்றப்பிரிவு பிரிவின் ரகசிய தகவல் கிடைத்ததும், வங்கி தெருவில் உள்ள கிறிஸ்டோபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, சம்பவ இடத்தில் இருந்து 977000 பவுண்ட் மதிப்புள்ள போலி நோட்டுகள் மற்றும் அவற்றை தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரங்களை விசாரணைக் குழுவினர் கண்டுபிடித்தனர்.