பிரான்ஸில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஹிந்து கோவில்
பிரான்ஸில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவிலை வரும் செப்டம்பர் மாதம் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பாரிஸூக்கு அருகே உள்ள புஸ்ஸி செயின்ட் ஜார்ஜஸ் பகுதியில் பிரான்ஸின் முதல் பெரிய ஹிந்து கோவிலான பிஏபிஎஸ் சுவாமிநாராயண் ஹிந்து மந்திர் திறக்கப்பட உள்ளது. இதற்கான திறப்பு விழா அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 2ம் திகதி முதல் 14ம் திகதி வரை 13 நாட்கள் கலாசார திருவிழா நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாக்களையும், பூஜைகளையும் மஹந்த் சுவாமி மகாராஜ் துவக்கி வைக்க உள்ளார்.
கோவில் திறப்பு விழாவில் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மந்திர் கட்டுவதற்கான கற்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரான்ஸில் உள்ள இந்திய சமூகம் இந்தக் கோவிலை வரவேற்றுள்ளதுடன், இது இந்தியா, பிரான்ஸூக்கு இடையேயான கலாசார மற்றும் ஆன்மிக உறவுகளை ஆழப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளனர்.