டொராண்டோவில் முதல் முறையாக கைப்பற்றப்பட்ட அதிகபடியான ஆபத்து பொருள்!
டொராண்டோவில் சுமார் 58 மில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோ பொலிஸாரின் சேவையின் வரலாற்றில் மிகப்பெரிய ஒரு நாள் போதைப்பொருள் கைப்பற்றல் நாள் இதுவென அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வார விசாரணைக்குப் பின்னர், போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படும் 2 வீடுகள் மற்றும் மூன்று வாகனங்களில் தேடுதல் உத்தரவுகளை பொலிஸார் பெற்றிருந்தனர்.
அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 520 கிலோகிராம் படிக மெத்தாம்பேட்டமைன் மற்றும் 151 கிலோ கோகோயின் ஆகிய போதை பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போதைப்பொருட்கள் வியாழக்கிழமை பொலிஸ் தலைமையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதன்போது செய்தியாளர் சந்திப்பில் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் போதைப் பொருட்கள் அடங்கிய பைகளில் குவிக்கப்பட்டன.
இது பாரிய உயிர்களை காப்பாற்றிய ஒரு சுற்றிவளைப்பாகவே பார்க்கப்படுவதாக தலைமை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.