துஷ்ப்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆடம்பர கிராமம்; எங்குள்ளது தெரியுமா!
அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர்.
இந்த கிராமம் 2009 ஆம் ஆண்டு பாஸ்டர் டெக் விடெரோ (Pastor Tech Videro)என்பவரால் உருவாக்கப்பட்டது.
இந்த கிராமத்தில் துஷ்பிரயோக குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள் வாழ்கின்றனர்.
துஷ்பிரயோக குற்றங்களுக்கான தண்டனை பெற்று தண்டனை காலத்தை நிறைவு செய்தவர்கள் மீண்டும் சமூகத்தில் சேரலாம் என்பதே இதன் நோக்கம்.
இங்கு வாழ்பவர்கள் குறித்து கருத்து
இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால் கடுமையாக துஷ்பிரயோக குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த தனிப்பட்ட கிராமத்தில் ஒரே மாதிரியாக, ஆடம்பரமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கிறது.
புளோரிடா மாநில சட்டங்களின்படி இக் குற்றவாளிகள் பள்ளி, பூங்கா அல்லது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆயிரம் அடிக்குள் வாழ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிராமத்தில், குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் கூட இந்த கிராமத்தில் குடியேறியுள்ளனர்.
இங்கு குடியேறியவர்களில் ஒருவரான பாட் பவர்ஸ் (Pat Powers) பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்றவர்.
விளையாட்டு பயிற்சியின் போது மாணவர்களுடன் உடலுறவு கொண்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்துள்ளார்.