பிலிப்பைன்ஸில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் இன்று சனிக்கிழமை (03) 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என்று ஜெர்மன் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 6.8 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் , சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், நிலநடுக்கத்துக்குப் பிந்திய நிலஅதிர்வுகள் ஏற்படக்கூடும் என பிலிப்பைன்ஸ் நிலநடுக்க ஆய்வு நிறுவனம் எச்சரிகை விடுத்துள்ளது.
அதேவேளை பிலிப்பைன்ஸ் பசிபிக் பெருங்கடலின் ‛ரிங் ஆஃப் ஃபயர்' எனும் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.