நள்ளிரவில் பூமி மீது மோதிய விண்கல் ; தீப்பிழம்பாக சிதறிய பிரம்மிப்பூட்டும் காட்சிகள்
70 செ.மீட்டர் விட்டம் கொண்ட விண்கல் ஒன்று ரஷியாவின் யாகுடியா பகுதியில் விழுந்து தீப்பிழம்பாக சிதறிய பிரம்மிப்பூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
Asteroid #C0WECP5 hit Siberia today 🌏☄️
— Milky Way (@PanatpongJ) December 3, 2024
📷Северный край pic.twitter.com/oiP1swEaZH
இந்த நிலையில் புவி வட்டப்பாதைக்குள் 70 செ.மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் நள்ளிரவு வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதன்படி அந்த விண்கல் நேற்று இரவு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.
கண்டுபிடிக்கப்பட்ட 12 மணி நேரத்துக்கு பிறகு அந்த விண்கல்லானது ரஷியாவின் யாகுடியா பகுதியில் விழுந்துள்ளது.
#Asteriod #Russia #NASA #SouthKorea #martiallaw #Pushpa2TheRule Asteroid of 70 cm falls on earth Russia pic.twitter.com/YaWORxZC9k
— Bijender Singh 📉🙈🙉🙊📈 (@BijenderSingh04) December 3, 2024
பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், விண்கல் பல துண்டுகளாக சிதைந்து அங்குள்ள வனப்பகுதியில் தீப்பிழம்பாக சிதறி விழுந்தது.
இதுதொடர்பான பிரம்மிப்பூட்டும் காட்சிகளும் வெளியாகி உள்ளது.
அதிர்ஷ்டவசமாக விண்கல்லின் அளவு மற்றும் அது விழுந்த இடம் காரணமாக பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விண்கல் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஒரு தீப்பந்து போல காட்சியளித்துவிட்டு சென்றுவிடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
🇷🇺...and in case this week hasn't been eventful enough for you, here is an meteorite landing in Yakutia.#Russia #Yakutia #Meteor pic.twitter.com/Lp2xTR4dJI
— FH Operador (@fh_operador) December 3, 2024