ஒன்றாரியோவில் பாடசாலை பேருந்துகள் ரத்து!
மத்திய ஒன்றாரியோ பகுதியில் பாடசாலை பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாடசாலை பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகள பகுதிகளில் 30 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பல வீதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதனால் இவ்வாறு பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கனடிய சுற்றாடல் திணைக்களமும் போக்குவரத்து தொடர்பிலான எச்சரிக்கை வெளியிட்டு இருந்தது.
மீபோர்ட், தோர்ன்பரி, மார்க்டேல் மற்றும் பிளஸர்டன் போன்ற பகுதிகளின் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளது.
குளிர் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கடும் பனிப்பொழிவு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.