இறங்கும்போது ஏற்பட்ட விபரீதம் ; சுவரில் மோதிய விமானம்! தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ஓடுதளத்தில் இறங்கிய விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி இரண்டாக உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலியா தலைநகர் மொகாதிஷூவில் உள்ள ஏடன் அடே விமான நிலையத்தில் ஹல்லா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றது.
தோல்வியில் முடிந்த விமானியின் செயல்கள்
இதன்போது விமானத்தின் லேண்டிங் கியர் எனப்படும் தரையிறங்கும் கருவி பழுதானதால் ஓடுதளத்தில் சறுக்கிக் கொண்டே சென்றது.
விமானத்தைக் கட்டுப்படுத்தும் விமானியின் செயல்கள் தோல்வியில் முடிந்ததால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி நொறுங்கியது.
விமானத்தில் 30 பயணிகளும் 4 ஊழியர்களும் பயணித்த நிலையில் விமானி அமரும் காக்பிட் பகுதி இரண்டாக உடைந்தது.
இதில் இரண்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டபோது பயணிகளும் விமான பணியாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.