டொரோன்டோவில் உலகக் கிண்ண போட்டிகளுக்கான தன்னார்வலர் பதிவு ஆரம்பம்
கனடாவின் டொரோன்டோவில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடருக்கான சேவைகளை வழங்கும் தன்னார்வலர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 2026ம் ஆண்டில் சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையினால் நடத்தப்படும் உலகக் கிண்ணப் போட்டித் தொடர் அமெரிக்கா, மெக்ஸிக்கோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ளது.
டொரோன்டோ நகரம், உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடருக்கான தன்னார்வலர் ஆட்சேர்ப்பு பணிகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.
டொரோன்டோவில் ஆறு உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கனடிய அணி பங்கேற்கும் உலகக் கிண்ணப் போட்டியொன்றும் இதில் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான ஏற்பாட்டுப் பணிகளுக்கு பெரும் எண்ணிக்கையிலான தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் டொரோண்டோவில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.