97 சிகரங்களுக்கு மலையேற்றம் செய்ய இலவச அனுமதி வழங்கும் நேபாளம்
நேபாளத்தில், அதிகம் அறியப்படாத மலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 97 இமயமலை சிகரங்களை இலவசமாக ஏற நேபாளம் அனுமதிக்கும் என்று அந் நாட்டு அதிகாரிகள் திங்கள்கிழமை (11) தெரிவித்தனர்.
இந்த முயற்சி நேபாளத்தின் மிகவும் தொலைதூர மற்றும் வளர்ச்சியடையாத இரண்டு மாகாணங்களான கர்னாலி மற்றும் சுதுர்பாசிமில் உள்ள மலைகளை இலக்காகக் கொண்டுள்ளது – இங்கு சிகரங்கள் 5,970 மீ முதல் 7,132 மீ வரை உள்ளன.
இந்த நடவடிக்கை வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் பொருளாதாரங்களை வலுப்படுத்தும் என்று நேபாள சுற்றுலாத் துறையின் பணிப்பாளர் ஹிமல் கௌதம் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் முதல் முறையாக நேபாளம் எவரெஸ்ட் சிகர அனுமதி விலைகளை உயர்த்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஏப்ரல்-மே மாத உச்ச பருவத்தில் மலை ஏறுவதற்கு $11,000 இல் இருந்து $15,000 வரை செலவாகும்.
செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் சீசன் அல்லாத ஏறுதல்களுக்கு $7,500 செலவாகும். டிசம்பர் முதல் பெப்ரவரி வரை $3,750 செலவாகும்.