கனேடிய வான்வெளியில் பறக்கும் மர்ம பலூன்: கண்காணிக்கும் கனடா பாதுகாப்பு அமைப்பு
கனடாவில், வானில் மர்ம பலூன் ஒன்று பறப்பதை உளவு பார்க்கும் பலூன் கனடா மற்றும் அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ஒன்று கவனித்து வருவதாக கனடா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மிக உயரத்தில் பறக்கும் மர்ம பலூன் ஒன்றைத் தாங்கள் கண்டுள்ளதாக கனடா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சீன உளவு பார்க்கும் பலூன் ஒன்றைத் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், தற்போது கனடாவும் அப்படி ஒரு பலூனைக் கண்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பலூனை கனடா மற்றும் அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு அமைப்பான NORAD கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ள கனடா பாதுகாப்பு அமைச்சகம், அதனால் கனடா மக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும், கனடா வான்வெளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
image - AP

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.