அமெரிக்காவை ஒருபோதும் ஈரான் நம்பியதில்லை
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் போது ஈரான், அமெரிக்காவை ஒருபோதும் நம்பியதில்லை என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பகாய் (Esmail Baghaei) தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டின் அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் (Esmail Baghaei) இதனை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் குற்றங்கள் வரலாற்றில் ஒரு நீங்காத வடுவாக உள்ளது.

இருந்த போதிலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஈரான் தயங்கியதில்லை இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஈரானின் விழிப்புணர்வுடனும், எதிர் தரப்பு மீதான முழுமையான நம்பிக்கையற்ற தன்மையுடனும் மட்டுமே நடத்தப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் (Esmail Baghaei) தெரிவித்துள்ளார்.