வானத்தில் தோன்றிய மர்மமான கருப்பு வளையம்; குழப்பத்தில் மக்கள்!
சிங்கப்பூர் - செந்தோசா அருகே வானத்தில் தோன்றிய மர்மமான கருப்பு வளையம் ஒன்று மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Singapore Incidents குழுவில் மர்மமான கருப்பு வளையத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பேஸ்புக் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இந்த வளையம் பல வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், இது என்ன என்ற குழப்பமும் தீயாக பரவியதாக சொல்லப்பட்டுள்ளது.
“தற்போது பார்த்தது என்ன என்று எனக்குத் தெரியவில்லை,” என்று பார்த்த ஒருவர் கூறினார். அவர் அந்த காட்சிகளை ஹார்பர்ஃப்ரண்டில் எடுத்தார்.
சிலர் அது ஒரு ‘ஏலியன் போர்டல் என்று கேலி செய்தனர், மற்ற சிலர் இது ஒரு வினோதமான பறவை உருவாக்கம் என்று கூறினர்.
செந்தோசா பகுதியில் இந்த கருப்பு வளையம் காணப்படுவது இது முதல் முறையல்ல எனவும் குறிப்பிடப்படுகின்றது.