ஆடையின்றி வந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்!
ஆடை இன்றிய கோலத்தில் கத்தியொன்றை ஏந்திவந்த ஆணொருவர் மற்றொரு நபரை அச்சுறுத்தி அவரின் ஆடைகள் மற்றும் உடமைகளை தருமாறு கோரிய சம்பவம் அமெரிக்காவின் புளோரிட மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் இது தொடர்பாக பொலிஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் "சம்பவ தினம்காலை 10 மணியளவில் இடம் பெற்ற நிலையில் பற்றைகளுக்குப் பின்னாலிருந்து ஓடி வந்த அந்த நபர் தன்னை அச்சுறுத்தி தான் அணிந்திருந்த ஆடைகளை பணப்பை, தொலைபேசி ஆகியவற்றை தருமாறு நிர்ப்பந்தித்ததாக கூறியுள்ளார்".
அதன்பின் அந் நபர் தனது வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ள நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்குச் சென்று தனது வாகனத்திலிருந்து இறங்கிய அவர் ஆடையின்றிய நிலையில் நடமாடத் தொடங்கியதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்நபர் வீதியில் சென்ற ஏனைய வாகன சாரதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் உடற்பயிற்சியிலும் ஈடுபட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹெலிகொப்டர் மூலம் அந்நபரை பொலிஸார் பின்தொடர்ந்த பொலிஸார் அவரை கைது செய்ததோடு அந் நபர் "பிரண்டன் ரைட்" என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நபர் ஏற்கெனவே கடத்தல், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை, போதைப்பொருள் வைத்திருந்தமை, பொலிஸார் மீது தாக்குதல், கைது செய்யப்படுவற்கு எதிர்ப்பு தெரிவித்தமை முதலான குற்றசசாட்டுகளில் குற்றவாளியாக காணப்பட்டவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.