சில நொடிகளுக்கு மட்டுமே பணக்காரர் பட்டியிலில் இடம் பெற்ற நபர்; ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம் !
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் லூசியானாவில் வசிக்கும் டேரன் ஜேம்ஸின் ( Darren Jamesy ) கையடக்க தொலைபேசிக்கு ஒரு குறுஞ் செய்தி வந்துள்ளது.
அந்த செய்தியில் அவரது கணக்கில் ரூ.3400 பில்லியன் டெபாசிட் செய்யப்பட்டுள்ளாதாக எழுதப்பட்டிருந்தது.
ஆனால் அவர் அதனை பயன்படுத்த அவர் நினைக்கவில்லை. உண்மை வெளியே தெரிந்தால் தான் மாட்டிக் கொள்ளலாம் என அவருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக அவர் தனது வங்கிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்..
சமூக வலைத்தளங்களில் அவருடைய கருத்துக்கள்
சமூக வலைத்தளங்களில் கூறுகையில், "நான் இந்த விடயத்தை வெளியில் யாருக்கும் தெரிவிப்பதை விரும்பவில்லை, ஆனால், நானே முன்பு லூசியானா பொது பாதுகாப்புத் துறையில் சட்ட அமலாக்க துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டேன்.
இப்போது நான் காணி விற்பனை முகவராக இருக்கிறேன்.எனவே இந்த தொகை தவறுதலாக வந்த பணம் என எனக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது அதனை பயன்படுத்துவது சரியில்லை. எனவே, குடும்ப உறுப்பினர்கள் கூறுவதை புறக்கணித்து, வங்கிக்கு சென்றேன்.
புகாரைப் பெற்ற வங்கி அவரது கணக்கை முடக்கியது. இந்த கோடிக்கணக்கான ரூபாய் அவரது கணக்கில் மூன்று நாட்களாக கிடந்துள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு வங்கியைத் திறந்தபோது, பணமும் பறந்து விட்டது. தவறாக வரவு வைக்கப்பட்ட பணம் திரும்ப பெறப்பட்டது. இந்தச் செய்தி உங்களுக்குத் தவறுதலாக வந்திருப்பதாகவும் அந்தப் பணம் வேறொருவருடையது என்றும் வங்கி கூறியது. அங்கிருந்த பணம் திரும்ப வந்து விட்டது.
வாழ்க்கையில் இவ்வளவு பணத்தை இதுவரை பார்த்ததில்லை எனக் கூறிய ஜேம்ஸ், அந்த மகிழ்ச்சி சில நொடிகளே நீடித்தது. உலகப் பணக்காரர்களில் எனது குடும்பம் சில நொடிகளுக்கு 25வது இடத்தில் இருந்தது.ஆனால் மேலும் சிக்கலைத் தவிக்க நான் அவற்றைத் திருப்பித் தர நடவடிக்கை எடுத்தேன்" என்று கூறியுள்ளார்.