வெள்ளை மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்; ஒருவர் பலி பலர் காயம்
வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் நிறுத்த உத்தரவிடப்பட்ட கார் ஒன்று பாதசாரி கடவையில் நடந்து சென்ற பலர் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடி நிறுவப்பட்டிருந்தது. இதன்போது காலாவதியான பதிவு எண் கொண்ட காரை அங்கு நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஒருவர் பலி பலர் காயம்
இதனையடுத்து அது நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகள் அதைச் சென்றடைவதற்குள், சாரதி மீண்டும் வாகனத்தை இயக்கி பாதசாரிகளை விபத்திற்குள்ளாகி சென்றுள்ளார்.
விபத்தையடுத்து சாரதி தப்பியோடிய நிலையில், தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பெண் குழந்தை உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை இதேபோன்ற சம்பவம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு அருகில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.