டொராண்டோவில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி!
டொராண்டோவில் கடந்த ஆண்டை விட வீடு விற்பனை 34 வீதம் குறைந்துள்ளதாக டொராண்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் வாரியம் (TRREB) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜூலையில் இருந்து சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், குளிர்காலத்தில் உயர்ந்த நிலைகளில் இருந்து தளர்த்தப்பட்ட விலைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்கள் சந்தைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 8,549 ஆகவும், ஜூலை 2022 இல் 4,900 ஆகவும் இருந்த நிலையில், இந்த மாதத்திற்கான விற்பனை 5,627 ஆக இருந்தது என்று TRREB வெள்ளிக்கிழமை கூறியுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு வீழ்ச்சி
34 சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு வீழ்ச்சி முந்தைய நான்கு மாதங்களைக் காட்டிலும் குறைவான வீழ்ச்சியாகும். சமீப மாதங்களில் ஏற்பட்டுள்ள வட்டி அதிகரிப்பு மற்றும் அடமான விகிதங்கள் விற்பனையை பாதித்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், வீட்டு விலைக் குறியீடு 8.9 சதவீதம் உயர்ந்தது மற்றும் அனைத்து வீட்டு வகைகளின் சராசரி விற்பனை விலை 0.9 சதவீதம் அதிகரித்து 1,079,500 டொலராக பதிவாகியுள்ளது.
இருப்பினும், ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் குறியீட்டு எண் குறைவாக பதிவாகியுள்ளது. மேலும் குறியீட்டின் சரிவுடன் சராசரி விலையில் மாதாந்திர வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட விலையுயர்ந்த வீட்டு வகைகளில் அதிக பங்கைக் குறிக்கிறது என்று TRREB தெரிவித்துள்ளமை குரிப்பிடத்தக்கது.