டொராண்டோவில் தமிழர் ஒருவர் கைது
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக டொராண்டோ பொலிசார் தமிழர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கடந்த பெப்ரவரியில், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்தது தொடர்பான விசாரணையின் போது, ஸ்பேடினா ஏவ் மற்றும் லேக் ஷோர் Blvd W பகுதியில் பொலிசார் தேடுதல் ஆணையை நிறைவேற்றினர்.
சிறுவர் ஆபாசப் படங்களை உருவாக்குவதற்காக சந்தேகநபர் ஒருவர் சிறுவர்களை இணையத்தில் வசீகரித்ததாகவும், சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்கள் ஒரு குடியிருப்பில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் டொராண்டோவைச் சேர்ந்த 34 வயதான ட்ரெவின் அசந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்தல், சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்தமை மற்றும் சிறுவர் ஆபாசப் படங்களை அணுகியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் குறித நபரால் பாதிகப்பட்ட பலர் இருக்கலாம் என கருதும் பொலிஸார், தகவல் தெரிந்தவர்கள் 416-808-8500 , 416-222-TIPS (8477) என்ற எண்ணில் அழைக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.