பிரான்ஸ் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து; வெளியான வீடியோ காட்சிகள்!
பிரான்ஸ் நாட்டிலுள்ள பேட்டரிகள் சேமிப்பகம் ஒன்றில் பயங்கர வெடிவிபத்து ஒன்றைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வடக்கு பிரான்சிலுள்ள Grand-Couronne என்ற இடத்தில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் லித்தியம் பேட்டரிகள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான பேட்டரிகள் வைக்கப்பட்டுள்ள அந்தக் கட்டிடத்தில் வெடிவிபத்தொன்று நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து அந்த கட்டிடம் பயங்கரமாக தீப்பற்றி எரிந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
⚠️ HAPPENING NOW: Massive explosion at a building housing thousands of lithium batteries (Bolloré Logistics) in Grand-Couronne, France.
— Upward News (@UpwardNewsHQ) January 16, 2023
Hundreds of firefighters on scene; level of danger in surrounding areas due to toxic fumes unclear. pic.twitter.com/j2Za29bvxa
அத்துடன், அந்தத் தீ அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவியுள்ளது. அந்த கட்டிடங்களில் சுமார் 70,000 ரப்பர் டயர்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன.
வெளியாகியுள்ள வீடியோக்களில் தீ பயங்கரமாக பற்றியெரிவதையும், வானில் கரும்புகை எழுவதையும் காணமுடிகிறது.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக கூறப்படும் நிலையில், யாருக்காகிலும் இந்த தீயால் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.