இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம்
பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்த நிலையில் நேபாளத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது
நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட நேபாள அரசாங்கம் போட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது. அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், நேபாளில் பிரதமர், ஜனாதிபதி பதவி விலகியதை அடுத்து போராட்டம் தணிந்தது. நாடு முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் நேபாளத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.