ஜெர்மனியில் ஏற்படவுள்ள பற்றாக்குறைக் குறித்து வெளியான எச்சரிக்கை!
ஜெர்மனியில் அடுத்த ஜனவரி மாதம் ஏற்படவுள்ள உள்ளூர் எண்ணெய் பற்றாக்குறை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ரஷ்ய எண்ணெய் மீதான தடை ஜனவரியில் நடைமுறைக்கு வரும் போது ஏற்படவுள்ள நிலைமை தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி உட்பட ஐரோப்பாவின் எரிசக்தி நெருக்கடி கண்டத்தின் மிகப்பெரிய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஒரு அறிகுறியாகும்.
ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் நம்பியிருக்கும் இரண்டு பெரிய சுத்திகரிப்பு நிலையங்களின் தாயகமான கிழக்கு ஜெர்மனியில் எரிசக்தி பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான எரிசக்தி நெருக்கடியால் மின்சார தடை ஏற்படுவதற்கும் குளிர் காலத்தில் மக்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்கவும் வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், ஜெர்மனியில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜெர்மனியில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளிர்காலங்களில் மக்கள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடிகளை சமாளிப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.