பிரான்ஸில் கஞ்சா பிரியர்களுக்கு ஆப்பு!
பிரான்ஸில் கஞ்சா போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
மருத்துவத் தேவைக்காக பயன்படுத்தப்படும் கஞ்சா போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
அதன்படி hexahydrocannabinol அல்லது HHC என அழைக்கப்படும் இந்த கஞ்சா பயன்பாடு பிரான்சில் அண்மையில் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் மிகச் சிறிய அளவிலான பதப்படுத்தப்பட்ட கஞ்சா மூலிகை மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வரும் வாரங்களில் அவற்றுக்கு தடை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சர் François Braun தெரிவிக்கையில், அடுத்த சில வாரங்களில் இந்த தடை கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
மேலும் இணையத்தளமூடாக தவறான நோக்கத்துடன் இவை விற்பனை செய்யப்படுவதாகவும், எதிர்பார்த்த அளவை விட மிக அதிகமான விற்பனையைச் சந்தித்துள்ளது எனவும், இதனை மீள ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.