எலான் மஸ்க் பதிவிட்ட வித்தியாசமான ட்வீட்!
ட்விட்டரில் எழுத்தாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உலகின் முதல் பணக்காரான எலான் மஸ்க் (Elon Musk) தன்னை தானே ஏலியன் என தெரிவித்துள்ளார்.
டெஸ்லா, போரிங் கம்பெனி, ஸ்பேஸ் எக்ஸ், நியூரோ லின்க், ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க்(Elon Musk), சமீபத்தில் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.
அத்துடன் அதன் தலைமை நிர்வாக அதிகாரி முதல் பல நிர்வாகிகளை அவர்களது பதவியில் இருந்து நீக்கி வரும் எலான் மஸ்க்(Elon Musk), அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
I’m an alien trying to get back to my home planet
— Elon Musk (@elonmusk) November 4, 2022
இந்த நிலையில் ட்விட்டரில் எழுத்தாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க்கின்(Elon Musk) விசித்திரமான பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் டிம் அர்பன் என்ற எழுத்தாளர், நீங்கள் கேள்விப்பட்டதிலேயே விசித்திரமான ஆனால் உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கக் கூடிய சூழ்ச்சி கோட்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்து இருந்த எலான் மஸ்க்(Elon Musk), நான் ஒரு ஏலியன். என் சொந்த கிரகத்துக்கு திரும்பி செல்ல முயன்று வருகிறேன் என தன்னை பற்றி தானே ஒரு சூழ்ச்சி கோட்பாட்டை வெளிபடுத்தியிருந்தார்.
இதற்கு மறுபதிலளித்த டிம் அர்பன், நீங்கள் பொதுவெளியில் இதனை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என நினைத்தேன் என்று தெரிவித்தார். அதை ஒப்புக்கொள்வதா இல்லை மறுப்பதா எனத் தெரியவில்லை, ஆனால் நான் வேற்றுகிரக வாசி என்பது உறுதி, “நான் வேற்றுகிரக வாசி என்று மீண்டும் எலான் மஸ்க் பதிலளித்தார்.
எலான் மஸ்க்கின்(Elon Musk) இந்த விசித்திரமான பதிலுக்கு இணையவாசிகள் பலவிதமான ரியாக்சனை பதிவிட்டு வருகின்றனர்.
எலான் மஸ்க்(Elon Musk) இதற்கு முன்பு 2018ல் ஒரு முறை இது போன்ற பதிலை வெளிப்படுத்தி இருந்தார், அதில் தான் ஒரு ஏலியன் என்றும் நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, எதிர்காலத்திலிருந்து என்று பதிலளித்தார்.