பிரான்ஸ் நதியில் சிக்கிய வெள்ளைத் திமிங்கிலம்!
பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சென் நதியில் 13 அடி நீளமும் 800 கிலோகிராம் எடையும் கொண்ட வெள்ளை திமிங்கலம் சிக்கியிருந்தமை கடந்த 2 ஆம் திகதி முதல் தடவையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உடல் பலவீனமடைந்திருந்த அத்திமிங்கிலத்தை மிருக வைத்தியர்கள் கருணைக்கொலை செய்துள்ளதோடு இத்திமிங்கிலம் ஏன் தனது வழக்கமான வசிப்பிடத்தை விட்டு, கடற்கரையிலிருந்து நதியொன்றுக்குள் சுமார் 100 கிலோமீற்றர் தூரம் வந்தது என்பது தெரியவில்லை.
இத்திமிங்கிலத்தை மீண்டும் சமுத்திரத்துக்கு நீந்திச்செல்லவைப்பதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என கூறுகின்றனர்.
இத்திமிங்கலம் போஷாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்ட்டுள்ளதோடு அது உணவு உட்கொள்ளவும் மறுத்த நிலையில் அதற்கு பசியைத் தூண்டுவதற்காக விற்றமின்களை கொடுத்தும் அது பலனளிக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.
கடந்த செவ்வாயக்கிழமை இரவு அத்திமிங்கலத்தை வலைக்குள் செல்ல வைக்கும் முயற்சியில் சுழியோடிகள் வெற்றி பெற்ற நிலையில் அதனை பாரம்தூக்கி மற்றும் வலையின் ஊடாக சுமார் 6 மணித்தியாலம் தூக்கியுள்ளனர்.
இத்திமிங்கிலத்தை குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றின் மூலம் ஆங்கிலக்கால்வாய் கடற்பகுதியில் கொண்டுசென்று விடுவதற்கான நடவடிக்கையில் 80 இறகும் அதிகமானோர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மிகப் பலவீனமாக காணப்பட்ட இத்திமிங்கிலம், சுவாசிப்பபதற்கு சிரமப்பட்டதை அதிகாரிகள் அவதானித்தனர்.
அதனால், அத்திமிங்கிலத்தை கடலில் விடுவிப்பதில் பலனில்லை எனக் கருதி அதை கருணைக்கொலை செய்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வகை வெள்ளைத் திமிங்கிலம் ஆர்டிக் சமுத்திரப்பகுதியில் பொதுவாக காணப்படும். பிரான்ஸின் கரையோரத்திலிருந்து இத்திமிங்கிகலங்கள் காணப்படும் அதிக கிட்டிய இடம் நோர்வேயின் வடபகுதியிலுள்ள ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டமாகும்.
இது பிரான்ஸின் சென் நதிதியிலிருந்து சுமார் 3,000 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.