பிரான்ஸில் பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!
பிரான்ஸில் ஜிகாதிப் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து பெண் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Douha Mounib எனும் பிரான்ஸ் பெண் பயங்கரவாதிக்கே இச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பரிசைச் சேர்ந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முறையாக சிரியாவுக்கு பயணமாகியிருந்தார்.
தனது தாதி படிப்பினை மேற்கொள்ளச் சென்றதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் அவர் ‘ஜிகாதிக்காகவும் இஸ்லாம் மதத்துக்கு ஆதரவாகவும் போர் புரியப்போவதாக தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் துருக்கிக்கும் அவர் பயணித்திருந்த நிலையில், துருக்கியில் வைத்து கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்படி விசாரணைகளின் பின்னர் அவருக்கு இவ்வார திங்கட்கிழமை பரிசைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.