ஒரு நொடியில் எடுத்த அதிரடி முடிவு ; 91 வயது முதியவரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்

Austria
By Sahana Nov 16, 2026 07:39 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சென்ற காரைத் தடுத்து நிறுத்தி, அதில் பயணித்த 91 வயது முதியவரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடிலெய்டு நகரின் ஹாம்ப்ஸ்டெட் வீதியில் வெள்ளை நிற கார் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தபோது, அது சீராகச் செல்லாமல் வீதியின் வலது மற்றும் இடது புறங்களுக்கு மாறி மாறிச் சென்றுள்ளது. இதனால், பின்னால் வந்த வாகன சாரதிகள் தொடர்ந்து ஒலிப்பான்களை ஒலித்து எச்சரித்துள்ளனர்.

ஒரு நொடியில் எடுத்த அதிரடி முடிவு ; 91 வயது முதியவரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் | A Young Man Saved The Life Of A 91 Year Old Man

இதனை அவதானித்த ஸ்காட் ஹாலண்ட் என்ற இளைஞர், ஏதோ விபரீதம் நிகழப்போவதை உணர்ந்து, ஏனைய வாகனங்களை முந்திச் சென்று குறித்த காரை நெருங்கியுள்ளார்.

அப்போது, காரின் சாரதி இருக்கையில் 91 வயதுடைய முதியவர் ஒருவர் இருந்ததுடன், அவரால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய நிலையில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஸ்காட், உடனடியாகத் தனது காரை முதியவர் பயணித்த காருக்கு முன்னால் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

இதன்போது, முதியவரின் கார் ஸ்காட்டின் வாகனத்தின் பின்புறத்தில் மோதிய நிலையில் நின்றுள்ளது. இதன் மூலம், முன்னால் இருந்த இரு வீதிகள் பிரியும் பகுதியில் முதியவரின் கார் நுழைவதும், பெரும் விபத்து ஏற்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காருக்குள் இருந்த பீட்டர் லடாஸ் என்ற முதியவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ராயல் அடிலெய்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தற்போது அவர் குணமடைந்து வருவதாக அவரது மகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நொடியில் எடுத்த அதிரடி முடிவு ; 91 வயது முதியவரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் | A Young Man Saved The Life Of A 91 Year Old Man

இந்நிலையில், முதியவரைக் காப்பாற்றுவதற்காகத் துணிச்சலுடன் செயற்பட்ட ஸ்காட் ஹாலண்ட், பின்னர் அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார்.

அவரது துணிச்சலான செயலை பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

மேலும், தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் முதலமைச்சர் பீட்டர் மலினாஸ்காஸ், ஸ்காட்டைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது மனிதாபிமானச் செயலுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தனது உயிரையும் வாகனத்தையும் பொருட்படுத்தாமல், ஆபத்தான சூழ்நிலையில் விரைந்து செயற்பட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞரின் செயல் அவுஸ்திரேலியாவில் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US