கனடாவில் வீடொன்றின் முகப்பில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த சிசு
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சிசுவொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிறந்து ஒருநாளான சிசுவொன்றே இவ்வாறு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லண்டன் நகரின் ஸ்டெர்லிங் தெருவில் உள்ள வீடொன்றின் முகப்புப் பகுதியில் இந்த குழந்தை வைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டுள்ளனர்.
இந்த வீட்டில் வசிக்கும் பிரியா வானியர் என்ற பெண்ணிடம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிசுவை வீட்டுக்குள் அழைத்து வந்து சூடாக வைத்திருக்குமாறு பொலிஸார் குறித்த பெண்ணிடம் தெரிவித்தள்ளனர். உடனே அம்புலன்ஸை அழைக்கப்பட்டுள்ளது.
இந்த சிசு ஒரு நாளான குழந்தையாக இருக்க வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுமையான குளிருடனான காலநிலையில் இவ்வாறு சிசு வெளியே கைவிடப்பட்டிருந்தது எனவும் குழந்தையின் உடல் நலத்திற்கு ஆபத்தில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிசுவின் தாயின் நிலைமை என்னவாக இருக்குமோ என பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளதுடன் குறித்த பெண்ணை தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.