அம்பியூலன்ஸ் வசதியின்றி கனடாவில் அடுத்தடுத்து பதிவான இரண்டாவது மரணம்
அம்பியூலன்ஸ் வண்டி வசதியின்றி கனடாவின் சிறிய கிராமமொன்றில் ஒரே மாதத்தில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது.
மருத்துவ உதவிக்காக காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் அஸ்கிராஃப்ட் பகுதி இவ்வாறு மருத்துவ உதவிக்காக காத்திருந்த நிலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நாயுடன் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்ட போது குறித்த நபர் உள்ளூர் ஆம்புலன்ஸ நிலையத்திற்கு அருகாமையில் காத்திருந்த போதும் மருத்துவ உதவியாளர்கள் அருகாமையில் இல்லாத காரணத்தினால் குறித்த நபரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அருகாமையில் இருந்த தன்னார்வ தீயனைப்புப் படையினர் முதல் உதவிகளை வழங்கிய போதிலும் அந்த முயற்சி குறித்த நபரின் உயிரை பாதுகாக்க போதுமானதாக அமையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மாத இடைவெளியில் குறித்த பகுதியில் உரிய நேரத்தில் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது எனவும் மக்கள் இந்த சம்பவங்கள் குறித்து கவலை அடைந்துள்ளதாகவும் நகரின் மேயர் பார்பரா ரோடன் தெரிவிக்கின்றார்.
பிரிட்டிஷ் கொலம்பிய அவசர சுகாதார சேவையில் உள்ளூர் பணியாளர்களை இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிராமிய பகுதிகளில் அவசர சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகள் மிகவும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்