நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிறுவனின் மரணம்
அவுஸ்திரேலியாவில் பூர்வகுடி பள்ளி மாணவன் கொல்லப்பட்ட விவகாரம் மீண்டும் இனவெறுப்பு விவாதத்தை முன்வைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் நோங்கர் சமூகத்தை சேர்ந்த 15 வயது பள்ளிமாணவன் கும்பல் ஒன்றால் கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளான்.
இன்னொரு 13 வயது மாணவனும் கொடூர தாக்குதலுக்கு இலக்காகியுள்ளான். நாடு மொத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் தற்போது 21 வயது வெள்ளையின இளைஞர் ஜாக் ஸ்டீவன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஜாக் ஸ்டீவனின் கார் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், அதன் பேரிலான சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பூர்வகுடி இளைஞர்களை தாக்கியிருக்கலம் என பொலிஸ் தரப்பு கூறுகிறது.
ஆனால், ஜாக் ஸ்டீவனால் தாக்குதலுக்கு இலக்கான மற்றும் மரணமடைந்த மாணவர்கள் அந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.
மேலும், தாக்குதலுக்கு முன்னர் குறித்த பூர்வகுடி சிறார்கள் இனவெறுப்பு இழிசொல்லுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.
பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், இந்த விவகாரம் உண்மையில் இனவெறுப்பு தொடர்புடையது என்றார்.