வெளிநாடொன்றில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 7 பாதசாரிகள்
ஜாம்பியா நாட்டில் பாதசாரிகள் மீது பேருந்து மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். ஜாம்பியா நாட்டின் லுவாபுலா மாகாணத்தின் செம்பி மாவட்டத்தில் பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அதில் மாவட்ட கவுன்சில் செயலாளர் உள்பட பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி வாகனம் சாலையின் ஓரம் பாதசாரிகள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இதுபற்றி காவல்துறை செய்தி தொடர்பு பெண் அதிகாரி எஸ்தர் கூறும்பொழுது, விபத்தில் செயலாளர் சிறிய அளவிலான காயங்களுடன் தப்பியுள்ளார்.
பாதசாரிகள் 7 பேர் பலியாகி உள்ளனர். ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார் என தெரிவித்து உள்ளார்.