காலி முகத்திடலில் 13 வயது துஷ்பிரயோகம் ; சந்தேகநபரை தேட பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்காக கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் 2026 ஜனவரி 23ஆம் திகதி கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் ஒரு பகுதியாக, சந்தேகநபரின் வரைபடம் (Composite Sketch) ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபரை அடையாளம் காண்பதற்கு அல்லது அவர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
சந்தேகநபர் அல்லது சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தகவல் வழங்குவதற்கான தொடர்பு இலக்கங்கள்
கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071-8591560
கோட்டை பொலிஸ் நிலையம்: 011-2432635
கவல் வழங்குபவர்களின் அடையாளம் தொடர்பில் உரிய இரகசியத்தன்மை பேணப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.