ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை ; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமெரிக்கா மீதான ஆயுதச் சார்பை இஸ்ரேல் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் ஈரானுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அத்துடன்,ஈரானை எதிர்கொள்ள இஸ்ரேல் தனது சொந்த ஆயுத உற்பத்தித் திறனைப் பெருமளவில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அமெரிக்கா வழங்கி வரும் பல ஆண்டுகால இராணுவ ஆதரவை மதித்தாலும், இஸ்ரேலுக்கு என சுதந்திரமான ஆயுத உற்பத்தி அமைப்பு அவசியத் தேவையாக உள்ளது.
மேலும் நாட்டின் பாதுகாப்புக்காக இனி அமெரிக்கா மீதான ஆயுதச் சார்பை முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,, ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் எடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்நாட்டு ஆயுத உற்பத்தி மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.