ஒரே உத்தரவில் அரசியல் முடக்கம் ; மேற்கு ஆப்பிரிக்க இராணுவ அரசின் அதிரடி
மேற்கு ஆப்பிரிக்காவில் புர்க்கினா பெசோ நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அந்நாட்டு இராணுவ அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய கெப்டன் இப்ராகிம் ட்ராரோ தலைமையிலான அரசாங்கம், நாட்டில் நிலவும் பிரிவினைகளைத் தவிர்க்கவும், நாட்டை மறுசீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சர் எமில் ஜெர்போ கூறுகையில், "நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மக்களிடையே ஒற்றுமையின்மையை வளர்ப்பதுடன், நாட்டின் சமூகக் கட்டமைப்பைச் சிதைக்கின்றன.
எனவே அவை அனைத்தும் கலைக்கப்படுகின்றன" என அறிவித்துள்ளார்.
இந்தத் தடையைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளின் சொத்துக்களும் அரசுடைமையாக்கப்படும் என்றும், இது தொடர்பான புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.