பிரபல ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவியும் மர்ம மரணம்
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற நடிகர் ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி பெட்சி அரகாவாவுடன் வீட்டில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 95 வயதுடைய அமெரிக்க நடிகர் ஜீன் ஹேக்மேனும் 63 வயதான மனைவி பெட்சி அரகாவாவுடன் உயிரிழந்துள்ளனர்.
சாண்டா ஃபே கவுண்டி ஷெரிப் அலுவலகம் இறப்புகளை உறுதிப்படுத்தியது. மேலும் இதில் எந்தத் தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தம்பதியரின் நாயும் இறந்து கிடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:45 மணிக்கு தம்பதியினரைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1972 ஆம் ஆண்டு "தி பிரஞ்சு கனெக்ஷன்" படத்தில் டிடெக்டிவ் ஜிம்மி "போபியே" டாய்ல் வேடத்தில் நடித்ததற்காக ஹேக்மேன் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார்.
மேலும் 1992 ஆம் ஆண்டு கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய வெஸ்டர்ன் "அன்ஃபர்கிவன்" படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான மற்றொரு விருதைப் பெற்றார்.
1940 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் பிறந்த இவர், 16 வயதில் அமெரிக்க கடற்படையில் சேர தனது வயதைப் பற்றி பொய் சொன்னார்.
இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் நடிப்பு வாழ்க்கையைத் தொடர்ந்தார். 2004 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.