பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் பிரபல நடிகை உயிரிழப்பு
ஆஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகையான சில்வினா லூனா பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் ஏற்பட்ட சிறுநீர் பாதிப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
43 வயதான லூனா கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையை மேற்கொண்டிருந்த நிலையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வாரத்திற்கு சுமார் மூன்று முறைகள் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு நடிகை தள்ளப்பட்டார்.
இதனிடையே சில்வினாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த 31 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்தவர் கைது
இதேவேளை பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாகவே அவருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த அனிபால் லாடாக்கி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை கடந்த சில வருடங்களாக பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் பிரபல அமெரிக்க மொடல் அழகியான கிறிஸ்டினா ஆஷ்டனும், கடந்த மே மாதம், பிரபல கன்னட நடிகை சேத்தனா ராஜுவும் , பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.