இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்ட பிரபல நடிகை!
நடிகை கங்கனா ரணாவத் சமூக ஊடகங்களில் தேசத்துரோக மற்றும் இழிவான கருத்துக்களை பதிவு செய்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து ‘விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் நடவடிக்கை போன்றது’ என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.
இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதற்காக டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழு, நடிகை கங்கனா ரணாவத் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளது. அந்த புகாரில் சமூக ஊடகங்களில் தேசத்துரோக மற்றும் இழிவான கருத்துக்களை நடிகை கங்கனா ரணாவத் பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதற்காக மும்பை நகர கூடுதல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு பதிவில் நடிகை கங்கனா ரணாவத் ‘இந்தியா ஒரு ஜிஹாதிஸ்ட் தேசம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் பொலிஸார் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.