ஹெய்ட்டி மற்றும் சிரிய அகதிகள்: கனடாவிற்குள் மீண்டும் நுழைய முடியுமா?

Canada Haiti
By Kamal Jul 28, 2026 04:49 AM GMT
Report

அமெரிக்காவில் வாழும் 3,50,000-க்கும் அதிகமான ஹெய்ட்டி நாட்டினரும், சுமார் 6,000 சிரிய நாட்டினரும் தங்களது 'தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை' இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், அவர்கள் மீண்டும் கனடாவிற்குள் பெருமளவில் தஞ்சமடைய முயல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயற்கைப் பேரிடர்கள் மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாகத் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாத வெளிநாட்டினருக்கு அமெரிக்கா TPS என்ற பாதுகாப்பை வழங்கி வந்தது.

ஹெய்ட்டி மற்றும் சிரிய அகதிகள்: கனடாவிற்குள் மீண்டும் நுழைய முடியுமா? | Option For Thousands Of Haitians And Syrians

ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தத் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், அங்கு வாழும் ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நாடு கடத்தப்படும் அபாயத்தைச் சந்திக்க வேண்டும்.

கடந்த காலங்களில் அமெரிக்காவில் பாதுகாப்பு அந்தஸ்தை இழக்கும் பலர் கனடா எல்லை வழியே, குறிப்பாக 'ராக்ஸாம் ரோடு' போன்ற உத்தியோகபூர்வமற்ற எல்லைப் பாதைகள் வழியாகக் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் போக்கு காணப்பட்டது.

எனினும், தற்போதைய சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டது என தொராண்டோவைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞர் ஜோயல் சாண்டலக் தெரிவித்துள்ளார்.

கனடா அரசாங்கம் தற்போதைய சூழ்நிலையில் ஹெய்ட்டி மற்றும் சிரியா நாடுகளுக்கு மக்களைத் திருப்பி அனுப்புவதில்லை.

எனவே, ஏற்கனவே கனடாவிற்குள் இருப்பவர்கள் மனிதநேய அடிப்படையில் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால், புதிதாக அமெரிக்க எல்லையைக் கடந்து கனடாவிற்குள் நுழைவது சாத்தியமற்றது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US