புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை; உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள்
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியு ள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்தபோதே டிரம்ப் இதனை கூறியுள்ளார்.
65 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவி
நாங்கள் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக தற்காப்பு ஆயுதங்கள். அவர்கள் (உக்ரைன்) மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். (ரஷிய அதிபர்) புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை." என தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், உக்ரைனுக்கு 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்க உறுதி அளித்திருந்தார்.
அதேநேரத்தில், டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஜனவரியில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.
அதேநேரத்தில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என கடந்த வாரம் மாளிகை அறிவித்த நிலையில், தற்போது உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.