பட்டப்பகலில் துணீகர சம்பவம்: பல மில்லியன் டொலர் நகைகள் மாயம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பிரபல நகை கடையில் புகுந்து நகைகளை மொத்தமாக அள்ளிச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பகுதியில் அமைந்துள்ள Rocco நகை கடையிலேயே இந்த துணீகர சம்பவம் அரேங்கேறியுள்ளது. முகமூடி அணிந்து கோடாரியுடன் கடைக்குள் புகுந்த அந்த கும்பல் சுமார் 2 மில்லியன் டொலர் மதிப்பிலான நகைகளை அள்ளிக்கொண்டு மாயமாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் 2.30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. வெறும் 45 நொடிகளில் குறித்த கும்பல் கொள்ளையிட்டு தப்பியுள்ளதாக விசாரணையை முன்னெடுத்துள்ள நியூயார்க் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் நியூயார்க் நகரில் நடந்த கொள்ளை சம்பவத்தின் பாணியில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும், சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த 16 கொள்ளை சம்பவங்களில் குறித்த கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரியப்படுத்தும் பொதுமக்களுக்கு 3,500 டொலர் வெகுமதி அறிவித்துள்ளனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் அனைவரும் கருப்பினத்தவர்கள் எனவும் 20 வயது கடந்தவர்கள் எனவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.