ரணிலுக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு வெளியிடும் சட்ட மா அதிபர் திணைக்களம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்குவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றது.
நீதவான் நியூலுபுலி லங்கபுரா முன்னிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை சூம் தொழில்நுட்பம் ஊடாக முன்னிலையாவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்குவதனை எதிர்த்துள்ளார்.