ரஷ்யாவில் மீண்டும் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணம்!
ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 37,156 பேர் பாதிக்கப்பட்டதோடு 1,254 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 97 இலட்சத்து 66 ஆயிரத்து 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2இலட்சத்து 61 ஆயிரத்து 589 பேர் மரணமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 10இலட்சத்து 39 ஆயிரத்து 225 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 37, 004 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 79 இலட்சத்து 56ஆயிரத்து 254 பேர் குணமடைந்துள்ளனர்.