கனடிய தன்னார்வ தொண்டர் உக்ரேனில் பலி
கனடாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர் ஒருவர் உக்கரேனில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய படையினர் கடந்த வார இறுதியில் மேற்கொண்ட ஏறிகணை தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
ரோட் டு ரிலீஸ் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய குறித்த கனைடியரும் மேலும் மூன்று பேரும் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்தோணி இன்ஹார்ட் என்பவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பஹ்மூத் பகுதியில் பொதுமக்களை சந்திப்பதற்காக இவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஸ்பெய்ன் பிரஜை ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோடு ரிலீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணியாற்றியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.