எயார் கனடா விமான சேவை நிறுவனம் விமானப் பயணங்களை ரத்து செய்வதாக அறிவிப்பு
எயார் கனடா விமான சேவை நிறுவனம் விமானப் பயணங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாளையதினம் முதல் விமானப் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா, வெள்ளிக்கிழமை மேலும் பல விமானங்கள் ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் ஒரு இடையூறு ஏற்பட்டால் ஒரு நாளைக்கு சுமார் 130,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படலாம் என எயார் கனடா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
விமானப் பணியாளர்களின் தொழிற்சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படாத காரணத்தினால் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே விமானப் பயணிகள் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.