கனடாவின் இந்தப் பகுதியில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை
கனடாவின் ஹாலிஃபாக்ஸ் காற்றின் தரம் தொடர்பில் சிறப்பு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பேயர்ஸ் ஏரி காட்டுத்தீ காரணமாக இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலியஸ் பவுல்வார்டு மற்றும் டகர் மெக்நீல் டிரைவ் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, தொடர்ந்து எரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீயில் இருந்து வெளியாகும் புகை, அந்தப் பகுதியில் காற்றின் தரத்தை குறைப்பதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்கள் வெளியில் செலவிடும் நேரத்தை குறைக்குமாறும், முடிந்தவரை ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சுமார் 30 தீயணைப்புப் படையினர் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏரிக்கு அருகாமையில் இருந்த மருத்துவமனையொன்றின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.