விமானப்படை வீரர் மரணம்
விமானப்படை வீரரான 26 வயதுடைய ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்தி ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த அவர் முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமில் நேற்று இரவு 7.30 மணியளவில் விமானப்படையினர் கடமையாற்றும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சம்பவம்
முகாமுக்குள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தை அடுத்து தேடுதல் நடத்தப்பட்டதாகவும் அதன் பின்னரே விமானப்படை வீரரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை விமானப்படையின் உள்ளக விசாரணைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று நடத்தப்பட்டு பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் அலவ்வ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.